ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

Photo of author

By Parthipan K

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:-

ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி எங்கு என்ன செய்துள்ளார்கள்.

மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார்கள் ஆனால் இன்றுவரை செய்யவில்லை. டீசல் விலையை குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் அதையும் குறைக்கவில்லை. இது எதையும் செய்யாமல் 70 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின்.

இதற்கிடையே, எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்து சில காலம் தான் ஆகிறது என்று கூறுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு பொது தேர்தலின் போது ஆட்சியாளர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும் என்று பேசினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொன்னார்களே ரத்து செய்தார்களா? உதயநிதி பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ஒரு ரகசியம் உள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தானே? ஆனால் இன்றுவரை அவரை ஆளையே காணவில்லை. சாவி கொடுத்தால் கைதட்டக் கூடிய பொம்மை போல மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.