செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க…
இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தாலும், வேலைப்பளுவாலும் சிலரது கண்களுக்கு போதுமான சத்து கிடைப்பதில்லை. இதனால், அவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படுகின்றன. சின்ன வயதிலேயே பார்வைக் கோளாறு காரணமாக கண்ணாடி போடும் நிலையும் ஏற்படுகிறது.
மேலும், டிவி, கம்ப்யூட்டர், செல்போனில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதால், மிக விரைவில் அவர்கள் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
மேலும், கண்களில் குளிர்ச்சித் தன்மை இல்லாததால், கண்களில் வறண்ட நிலை ஏற்படுவதாலும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
நம் உறுப்புகளிலேயே கண்கள் மிகவும் முக்கியமானது. கண்களில் பிரச்சினை ஏற்பட்டால் அவை நம் வாழ்க்கையையே பாதித்துவிடும். ஆதலால் எப்போதும் நாம் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அழகாகவும், பளிச்சென்ற பார்வையுடன் நாம் இருப்போம். நாம் அழகாக இருக்க வேண்டும் என்றால், நம் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சரி கண்களை எப்படி குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம் –
கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க அடிக்கடிக்கு எண்ணெய் குளியல் போட வேண்டும்.
கண்களுக்கு அவ்வப்போது மசாஜ் செய்ய வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி நாம் சாப்பிட வேண்டும்.
பச்சை காய்கறிகள், கீரைகளில் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆதலால், வாரத்திற்கு 2 முறையாவது கீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முருங்கை பிஞ்சு, நீர்ச்சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள் கண்களை பலப்படுத்தும். மேலும், பார்வை நரம்புகளை வலிமையாக்கும்.
கண்களை குளிர்ச்சியாக்க வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்கள் மேல் வைத்து 20 நிமிடங்கள் கழித்து, வெது,வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல்லை எடுத்து, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண்ணின் அழகாகும், குளிர்ச்சியாகும்.
மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களில் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் கண்கள் பலப்படும். இதனால் சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, நல்ல குளிர்ச்சியை தரும்.