இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

குமரி கடல் பகுதியில் உள்ளே வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, மற்றும் தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் … Read more

கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் … Read more

குறைந்து வரும் பாதிப்பு..! மெல்ல மெல்ல மீண்டு வரும் தமிழகம்!

குறைந்து வரும் பாதிப்பு..! மெல்ல மெல்ல மீண்டு வரும் தமிழகம்!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,36,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,272 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,413 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

புறநகர் ரயில்களில் இனி இவர்களும் பயணிக்கலாம்…! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

புறநகர் ரயில்களில் இனி இவர்களும் பயணிக்கலாம்...! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னை புறநகர் ரயில்களில் தனியார், ஊடக ஊழியர்களும் செல்ல தெற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. … Read more

4.84 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

4.84 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 48,422,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 34,671,483 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 12,519,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89,372 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,230,786 … Read more

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு!

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,244 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,504 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பு… பின் நேர்ந்த பரிதாபம்!

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறப்பு... பின் நேர்ந்த பரிதாபம்!

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களிலேயே நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதிக்கட்ட முடிவினை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் … Read more

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பழகும் உணவின்றி பசியால் வாடினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கியது அம்மா உணவகங்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களின் மூலம் தமிழக அரசு இலவசமாக உணவு வழங்கியது. இந்த … Read more