அதானி குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதானி குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கவும் அதை குத்தகைக்கு எடுக்கவும் ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது ஏலத்தில் அதானி குழுமத்திற்கு குத்தகை கிடைத்துள்ளது.  திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகையை அதானி குழும நிறுவனம் எடுப்பதாக ஒப்பந்தம் பதிவாகியுள்ளது. ஆனால் அதே குத்தகை எடுக்கும் ஏலத்தில் கேரள அரசும் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது அதானி குழுமத்திற்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து கேரள அரசு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கேரள உயர்நீதிமன்றம் அதானி குழுமத்திற்க்கு எதிரான … Read more

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாய் கடந்த சில மாதங்களாகவே அனைத்து துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எதிர்த்து போராடி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவின் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சில … Read more

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் – யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் - யாருக்கு தெரியுமா?

மைசூர் பல்கலைக்கழகம் தனது நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே நேரில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பிற மாணவர்களும், பெற்றோர்களும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த இதர உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சி கர்நாடக ஆளுநர் தலைமையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியை … Read more

இன்றைய கொரோனா பாதிப்பு….! 3536 குறைகிறதா கொரோனாவின் வேகம்……!

உலகளாவிய அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்த அவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 10 லட்சமாக அதிகரித்து இருக்கிறது 11 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த உயிர்க்கொல்லி நோய் குணமாக இன்று வரை சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே மிக அதிக அளவில் பரவி வருகின்றது தொற்றுக்கான தடுப்பு ஊசிகள் கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக … Read more

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் – வருத்தம் தெரிவித்தார்!

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் - வருத்தம் தெரிவித்தார்!

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாய் தவுசாயம்மாள் காலமாணார். அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களும், பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் என அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களின் வருத்தங்களையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, மத்திய துறை அமைச்சர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரின் தாய் தவுசாயம்மாளின் இறுதி சடங்கு முடிந்து சில நாட்களே ஆன நிலையில், சென்னையில் பசுமை வழி சாலையில் … Read more

ஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

ஆதார் ஆணையம் கைவிரிப்பு - சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் மீது ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிசிஐடி இந்த 10 மாணவ – மாணவிகளின் புகைப்படங்களை பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையத்தில் கொடுத்து, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளது.  … Read more

விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!

விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் .....! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்.....!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் காலனியில் 30 குடும்பங்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை அந்த பகுதியை சார்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது குடித்து உள்ளனர். அப்போது மது அருந்திய ஒருசில மணி நேரத்தில் மது அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் … Read more

தமிழகத்தில் 6.90 லட்சம் பேர் பாதிப்பு! அக். 19 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் 6.90 லட்சம் பேர் பாதிப்பு! அக். 19 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 49 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,515 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் வருகை!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.  மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் … Read more

இது என்னடா புது சிக்கல்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இது என்னடா புது சிக்கல்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நினைவாற்றல் திறன் பாதிப்பு, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் பலர் நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, களைப்பு, குழப்பமான மனநிலை, கவனம் சிதறுதல் போன்ற தொந்தரவுகள் இருப்பதாக மருத்துவர்களை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிலர் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை நாடுவதாகவும் … Read more