திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீரென உள்வாங்கியது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்ததாகவும் ,திருவள்ளுவர் சிலை இருக்கும் வரை கடல் உள்வாங்கி இருப்பதனை நன்றாக காணப்பட்டதாக அப்பகுதி … Read more

உச்சத்தை தொடும் முட்டை விலை !! இனியும் அதிகரிக்கும் என வியாபாரிகள் அறிவிப்பு !!

உச்சத்தை தொடும் முட்டை விலை !! இனியும் அதிகரிக்கும் என வியாபாரிகள் அறிவிப்பு !!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 5.16 ஆக அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், முட்டை உற்பத்தி குறைந்தாலும், வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பாலும், புரட்டாசி மாசம் என்பதினாலும் மூட்டை விலை அதிக அளவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதம் முடிய இன்னும் இரண்டு வாரங்களில் இருப்பதனால், முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என்று முட்டை … Read more

தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் பணியிடங்கள்

தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் பணியிடங்கள்

சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி நிலைய செய்திப்பிரிவில் கீழ்க்காணும் பணிகளுக்கு தற்காலிக, தேவை அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 1.உதவி செய்தி ஆசிரியர் 2. செய்தியாளர் 3. செய்தி வாசிப்பாளர் இணையதள முகவரி: இதற்கான விண்ணப்படிவம், தகுதி, விதிமுறைகள், தேர்வு நடைமுறை, இதர விவரங்கள் https://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குனர்(செய்தி) மண்டல செய்திப்பிரிவு,பொதிகை தொலைக்காட்சி நிலையம்,சுவாமி சிவானந்தா சாலை,சேப்பாக்கம்,      … Read more

“ஹத்ராஸ் சீல்”! தலைவிரித்தாடும் ஜாதி வெறி! தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி! அரசியல் பின்புலம் உள்ளதா?

"ஹத்ராஸ் சீல்"! தலைவிரித்தாடும் ஜாதி வெறி! தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி! அரசியல் பின்புலம் உள்ளதா?

“ஹத்ராஸ் சீல்”! தலைவிரித்தாடும் ஜாதி வெறி! தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி! அரசியல் பின்புலம் உள்ளதா? கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் … Read more

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி,அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பன்னீர்செல்வமும்,எடப்பாடியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை வர உத்தரவு என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

இனி சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவித்தார். மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், புதுக்கோட்டை நகராட்சி சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையே சேவை” என்ற நோக்கில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் பேசிய … Read more

திருவாரூரில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது..! ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூரில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது..! ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பெண் ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் இயங்கும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அதிமுகவை சேர்ந்த உலகநாதன் என்பவர், சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்ரா … Read more

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை!

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை!

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை! தேசிய குற்றப் பதிவு பணியாகம்,பதிவான குற்றவியல் வழக்குகளின் அடிப்படையில் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.அதில் தமிழ்நாட்டில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னையில் கள்ளக்காதல் தொடர்பாக மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளதாகவும், இதில் சென்னை பட்டியலில் முதல் மாவட்டமாக திகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாதாரண தகராறு காரணமாக சென்னையில் சுமார் 90 கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.இது … Read more

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரத்தில் சிதறிக் கிடப்பது மக்களிடையே பெரும் பரபரப்பையும்,மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தையும், காட்டியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி சாலையில்,கொரோனா பரிசோதனை மாதிரிகள் சிதறிக் கிடந்தன.இதனால் அப்பகுதி மக்களிடையே நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை,அப்புறபடுத்த … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு: அக். 02 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு: அக். 02 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,653 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,603 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more