அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

அமமுக துணை பொதுச் செயலாளருக்கு கொரோனா பாதிப்பு!

அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொதுச் செயலாளருமான பழனியப்பனுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். … Read more

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

2020 – 2021.ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம். மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை … Read more

அரியர் தேர்ச்சி விவகாரம்! தமிழக அரசின் அரசாணை யுஜிசி விதிகளுக்கு புறம்பானது..! ஏஐசிடிஇ பதில்!

அரியர் தேர்ச்சி விவகாரம்! தமிழக அரசின் அரசாணை யுஜிசி விதிகளுக்கு புறம்பானது..! ஏஐசிடிஇ பதில்!

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு (யுஜிசி) புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். … Read more

இன்று தான் கடைசி நாள்..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

இன்று தான் கடைசி நாள்..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று மாலையுடன் முடிவடைகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான (2020 – 2021) மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் … Read more

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

அதிமுகவில் சில காலமாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் நடந்து வருகிறது. செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினார்களாம். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக இருந்து வந்த முனுசாமி இபிஎஸ் ஆதரவாக மாறியுள்ளார். செயற்குழு கூட்டம் முடிந்தபின் கேபி முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி உடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்கள். மறுநாள் … Read more

மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி… கள்ளக்குறிச்சியில் சோகம்!

மின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி... கள்ளக்குறிச்சியில் சோகம்!

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஊ.செல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் 60ற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ராமச்சந்திரன் ஆட்டுக் கொட்டகையில் தனது ஆடுகளைக் கட்டி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கிராமத்தில் விடிய விடிய பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கியதில் 65 ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக … Read more

ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

ஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற வாக்குவாதம் அதிமுகவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்ததும் நாமறிந்ததே. இதன்படி நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் விவகாரம் தலைவிரித்து ஆடியதாகவும், இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா’ … Read more

மது பாட்டில்கள் கொடுக்கல் வாங்கலில் தகராறு; இருவருக்கு அரிவாள் வெட்டு!!

மது பாட்டில்கள் கொடுக்கல் வாங்கலில் தகராறு; இருவருக்கு அரிவாள் வெட்டு!!

திருவள்ளூர் அருகே மது பாட்டில்கள் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (வயது 38), சுரேஷ் (வயது 36). இருவரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவர்களை வழிமறைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கூச்சல் போட்டதையடுத்து அவர்கள் 3 … Read more

CCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

CCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

‍நிறுவனம்:Central coalfields limited பணியின் பெயர்:Director வயது: வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்கலாம். தகுதி : Chartered Accountant அல்லது Cost Accountant போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA/ PGDM course என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,80.000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும். தேர்வு செயல்முறை : பதிவு … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,546 பேர் பாதிப்பு; 70 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,546 பேர் பாதிப்பு; 70 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 70 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,453 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,501 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more