போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!பதில் அளிக்குமா தமிழக அரசு!

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!பதில் அளிக்குமா தமிழக அரசு!

நாடு முழுவதும் பொது முடக்கம் அழிக்கப்பட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன.   கொரோனாவின் தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பேருந்து மற்றும் ரயில் சேவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இ பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்க பட்டிருந்தாலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ROAD TAX ரத்து செய்தல் போன்ற சில கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை. அரசு விரைவு பேருந்துகளை … Read more

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு கொரோனா தொற்றால் காலமானார்!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு கொரோனா தொற்றால் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் ஜி.பி. வெங்கிடு (வயது 86). கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோபி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், … Read more

2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்!

2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்!

கடந்த 2018 – 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் வரும் செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கைளினால், வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2018 … Read more

திமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் … Read more

குட் நியூஸ்!! இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை! மத்திய அரசு அதிரடி!

குட் நியூஸ்!! இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை! மத்திய அரசு அதிரடி!

குட் நியூஸ்!! இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை! மத்திய அரசு அதிரடி! இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பாக நேற்று ராஜ்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள் கீழ்கண்ட 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் மேலும் இ-விசா பற்றியும், விசா வருகை பற்றியும் அவர் விளக்கம் அளித்துள்ளார். விசா இல்லாமல் பயணிக்கும் … Read more

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை:! மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு! கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கைக்கு,மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையானது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. அரசியல் கட்சிகளுக்கிடையேவும், கல்வியாளர்களுக்கிடையேவும், பல்வேறு கருத்துகள் இந்த புதிய கல்வி கொள்கையை பற்றி நிலவி வருவதால்,பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க பள்ளி கல்வி துறை சார்பிலும் உயர்கல்வி துறை சார்பிலும் தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. … Read more

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நல பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு என்று வெளிவந்த செய்தியால் தேமுதிக கட்சி தொண்டர்களிடையேவும் கேப்டனின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் விஜயகாந்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி!

பெற்றோர்கள் கவனத்திற்கு!! பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை இனியும் நீடிக்க முடியாது:! உயர்நீதிமன்றம் அதிரடி! கொரோனா போது முடக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமும் அரசு பள்ளிகள் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள்,பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் 100 சதவீத கட்டணத்தை செலுத்தியாக வேண்டுமென்று பெற்றோர்களை நிர்ப்பந்தித்தது. பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு கெரோனா காலத்தில் 100% பள்ளி கட்டணம் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு; 63 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 63 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,010 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,363 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாராயணனுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் … Read more