மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா அமல் !! சட்டப்பேரவையில் ஒருமனதாக முடிவு

மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா அமல் !! சட்டப்பேரவையில் ஒருமனதாக முடிவு

இந்தியாவில் நீட் தேர்வு தொடங்கிய பின்பு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் குறைவாக இருப்பதினை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ,நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ,மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் இதற்காக ஓய்வுபெற்ற … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளது. இன்று மாநிலவை கூட்டப்பட்டு ,எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் ,மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் … Read more

தனக்கு தமிழ் தெரியாது என மீடியாவிடம் சரண்டர் ஆன தருமபுரி எம்பி

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

சமூக வலைத்தளமான ட்விட்டர் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கும் தளமாக விளங்கி வருகிறது. இதைப்பயன்படுத்தி பெரும்பாலான தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சி தொண்டர்கள் ட்விட்டரில் டிரண்டிங் செய்வதும் வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தருமபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து திமுகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான டாக்டர் செந்தில்குமார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக … Read more

மக்களே உஷார்… விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

மக்களே உஷார்... விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கான சட்ட மசோதா நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது‌. பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது அதில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி சட்டமசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை … Read more

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கான மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் … Read more

மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் கூறிய அறிவிப்பு !!

மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் கூறிய அறிவிப்பு !!

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தேர்தல் நடத்த ஏற்பாடாகி வரும் நிலையில் ,இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் ,தேர்வுகளுக்கான பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளனர்.தமிழகப் பல்கலைக்கழகத்தின் சில ஆன்லைன் மூலமாகவும் ,சில நேரடியாகவும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகமானது , ஆன்லைன் மூலமாக தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் தேர்வு எழுத … Read more

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 352 அதிகரித்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.4960-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 … Read more

ஸ்ரீரங்கம் கோவில்: இந்த முக்கியமான நாளில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!

ஸ்ரீரங்கம் கோவில்: இந்த முக்கியமான நாளில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபட முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு … Read more

பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபல பாடகி சின்மயி!!

பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபல பாடகி சின்மயி!!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு தவித்து வரும் ஏழைகளுக்கு சில லட்சம் கொடுத்து விளம்பரப்படுத்தும் நபர்கள் மத்தியில், பல லட்சம் ரூபாய் கொடுத்து சத்தமில்லாமல் இயல்பாக இருக்கும் பிரபல பாடகியின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாடகி சின்மயி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ய புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளர். ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலை பாடி கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ததாக கூறியுள்ளனர். … Read more