இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu-Assembly

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் (அரிசி மட்டும்) அனைவருக்கும் கடந்த மாதம் 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. மேலும் விலை இல்லா அரிசி, சீனி, பருப்பு, … Read more

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 42 லட்சத்து 33 ஆயிரத்து 504 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்!

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்! தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டிருந்த நிலையில் கோயம்பேடு சென்று வந்தவர்களால் தற்போது மீண்டும் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் 700 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் … Read more

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின்

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் … Read more

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் 70700க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஒரு பக்கம் அலோபதி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், நமது பாரம்பரிய மருத்து முறையான சித்த ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. … Read more

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக குவைத்தில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான … Read more

மே 18ல் விமான சேவை துவக்கம்?

மே 18ல் விமான சேவை துவக்கம்?

மே 18ல் விமான சேவை துவக்கம்? கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. இன்று முதல் (12.05.2020) தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவையை துவங்குவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் … Read more

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு? மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி. தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை நேற்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. … Read more