அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

Photo of author

By Parthipan K

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் கொண்ட அரசு பேருந்தை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.

பஸ் திருடப்படும் காட்சி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் நகரை சுற்றி உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்த போது திருடர்கள் சின்சொலி நகரில் இருந்து மிரியானா, தண்டூரா பகுதிகளை கடந்து தெலுங்கானா மாநிலத்திற்கு அந்த அரசு பேருந்தை கடத்தி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தெலுங்கானா மாநிலத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அந்த திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசுப் பேருந்தையே திருடி வேறு மாநிலத்திற்கு கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.