மெக்சிகோவில் திணறும் மக்கள்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடு அமெரிக்காவும் பிரேசிலுமே ஆகும். குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உள்ளது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 55 ஆயிரத்திற்கும் அதிகமாக இறந்துள்ளனர்.