உங்கள் ஸ்மார்ட் போனில் இன்னும் இதை செய்யவில்லையா?? அப்படியென்றால் கட்டாயம் ஆபத்து!!
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.
அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோன காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழலல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.
இவ்வாறு அதிக அளவில் இன்றியமையாத பொருளாக உள்ள ஸ்மார்ட் போனை அடிக்கடி restart செய்வது மிகவும் நல்லது.இந்த restart செய்வதன் மூலம் உங்களது மொபைல் போனை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும்.
இன்று உள்ள காலக்கட்டத்தில் பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ஒன்றுதான் இந்த ஸ்மார்ட் போன். இதனை பயன்படுத்தி மக்கள் உணவை ஆர்டர் செய்வது ,பொருட்கள் வாங்குவது , தங்களது தேவைக்காக பணம் செலுத்துவது போன்ற அனைத்திற்கும் ஸ்மார்ட் போனைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இப்படி அதிக அளவில் உபயோக படுத்தப்படும் மொபைல் போனை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிப்பது கட்டாயமாகும்.அந்த வகையில் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தங்களது மொபைல் போனை வாரத்திற்கு ஒருமுறை restart செய்துவந்தால் போதும்.
இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இப்படி செய்தால் உங்களது மொபைல் போனில் உள்ள தேவையற்ற தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.