வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

Photo of author

By Sakthi

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

நம்முடைய வயிற்றை சுத்தம் செய்து கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூலிகை டீயை தயார் செய்து குடிக்கலாம். இந்த மூலிகை டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன, இதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றை சுத்தம் செய்ய நாம் இந்த குலத்தில் செயற்கை முறையை பின்பற்றுகிறோம். அதாவது மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனை தொடர்ந்து செய்யும் பொழுது நமது உள் உறுப்புகள் அனைத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அதுவே நாம் இயற்கை முறையிலான வழிமுறையை பின்பற்றினால் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. மேலும் வயிற்றை சுத்தப்படுத்த இந்த மூலிகை டீயை குடித்து வாருங்கள். இந்த மூலிகை டீயில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

மூலிகை டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* ஓமம்
* சீரகம்
* சோம்பு

செய்முறை…

* முதலில் ஓமம் மற்றும் சுகத்தை 7 முதல் 9 மணி நேரம் நன்கு உறவைக்க வேண்டும்.

* பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஊறியதை சீரகம் மற்றும் ஓமந்தை அப்படியே அடுப்பில் வைத்து குதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வற்றியதும் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்த பிறகு இதை குடிக்கலாம்.

இந்த மூலிகை டீயின் நன்மைகள்…

* இந்த மூலிகை டீயில் சேர்க்கப்பட்டிருக்கும் ஓமத்தில் தைமால் என்ற சத்து உள்ளது. இந்த சத்து குடலின் இயக்கத்தை மேம்படுத்துகின்றது. மேலும் இதில் நார்ச்சத்து உள்ளது. ஓமம் நமக்கு ஏற்படும் அஜீரணம், வாயு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.

* இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சீரகமானது நமக்கு ஏற்படும் செரிம்னம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். சீரகத்திலும் ஓமத்தில் உள்ளது போல தைமால் சத்து உள்ளது.

* இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சோம்பு கல்லீரலில் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.