அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Parthipan K

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Parthipan K

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.அந்த விசாரணையில் சிசிடிவி காட்சி மற்றும் கிடைக்க பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது முகமது ஷாருக் மற்றும் முகமது இத்ரிஸ் என்பவர்கள் என்பது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் இருத்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இவர்கள் எதற்காக பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.