விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ்

0
663
Stop Hiccups Instantly
Stop Hiccups Instantly

விக்கலா??? உடனடியாக நிறுத்த ஈசியான டிப்ஸ்

விக்கல் என்பது பெரிய பிரச்சினை இல்லை. தொடர்ந்து 48 மணிநேரங்கள் விக்கல் எடுத்தால் மட்டுமே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகிலேயே மிக அதிக விக்கல் எது தெரியுமா?? ஒருவருக்கு சுமார் 60 வருடங்களாக தொடர்ந்து வந்தது தான்.

இதற்கு எந்த ஒரு வியாதியும் காரணம் கிடையாது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன. அவை என்ன அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நாம் மூக்கின் வழியாக மூச்சு இழுக்கும் போது அந்த காற்று மூச்சு குழாய் வழியாக நுரையீரல் சென்றடையும்.அந்த காற்றில் ஆக்ஸிஜன் இருக்கும். ஆக்ஸிஜன் உள்ளே சென்றதும் தேவையற்ற மாசுக்கள் கார்பன் டை ஆக்சைடாக நுரையீரல், மூச்சு குழாய் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும்.

மூக்கு மற்றும் வாயின் வழியாக மட்டுமே நாம் காற்றை உள்ளிழுத்து கொள்வதில்லை. நம் உடலில் டயாப்ரம் எனப்படும் மிகப்பெரிய தசை உள்ளது. இது வயிற்றுப் பகுதியையும், நுரையீரலையும் பிரிக்கக் கூடியது. இது மூச்சு உள்ளிழுக்கும் போது கீழிறங்கும். வெளிவிடும் போது மேலெழும்பும்.

சாதாரணமாக இருக்கும் இது சில சமயங்களில் சுருங்கி விரியும் போது கீழிறங்கும். அப்போது காற்றை உள்ளிழுக்கும். அந்த காற்றானது வோக்கல் கார்ட் என்ற பகுதியில் தடைபடும். இவ்வாறு வேகமாக இழைக்கப்படும் காற்று தடுக்கப்படும் போது விக்கல் உண்டாகும்.

இந்த டயாப்ரம் ஏன் காற்றை உள்ளிழுக்கிறது. அதிக உணவு உண்ணும் போது, மது அருந்துதல், சோடா போன்ற குளிர் பானங்கள், மன அழுத்தம், தட்பவெப்ப நிலை, போன்ற காரணங்களால் விக்கல் உண்டாகலாம்.

மேலும் சூயிங்கம் மெல்லுவது, அதிக சூடான மற்றும் குளிர்ந்த உணவு மற்றும் காரம் அதிகமாக எடுத்துக் கொள்வது டயாப்ரம் தசைகளை சுருக்கி விக்கல் ஏற்படுத்தலாம்.

நாம் விக்கல் ஏற்படும் போது உடனடியாக அதிர்ச்சி தரும் செயல்களை செய்யும் போது நிற்கும் என தவறான கருத்துக்கள் உள்ளன. இது சரியான முறை அல்ல.

அதற்கு பதிலாக எளிதாக செய்ய கூடிய முறைகளைபார்ப்போம்.

1. தோள்பட்டையில் இருந்து மூச்சினை தம் பிடித்து இறுக்கி பின் விடுவது அல்லது paper bag உள்ளே வாயை வைத்து மூச்சு விடவும். இதனால் நுரையீரலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நாம் திரும்ப திரும்ப சுவாசிக்கிறோம். இவ்வாறு கார்பன் டை ஆக்சைடை அதிக படுத்தும் போது விக்கல் நிற்கும். இதை தொடர்ந்து செய்ய கூடாது. ஒரு 5 நிமிடங்கள் செய்யலாம். இல்லை எனில் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படலாம்.

2.சர்க்கரை ஒரு ஸ்பூன் கொடுக்கும் போது நிற்கும்.

3. நாக்கினை சிறிது நேரம் வெளியே தொங்க விட்ட நிலையில் வைக்கவும். இதன் மூலம் டயாப்ரம் தசைகளுக்கு சிக்னல் போல செயல்பட்டு விக்கலை நிறுத்த உதவும்.

4. அடிக்கடி நாமே முயற்சி செய்து ஏப்பம் விட வேண்டும். இதனால் நிற்கும்.

5. முட்டிக்காலை நெஞ்சில் அழுந்தி குத்துக்காலிட்டு உட்கார வேண்டும்.இதன் மூலமும் விக்கல் நிற்கும்.

6. வாயையும், மூக்கினையும் மூடிக்கொண்டு காதின் வழியாக உள்ளிழுத்த காற்றினை வெளியேற்றம் செய்யும் போது காதுசவ்வு விரிவடைகிறது. இங்கு வேகஸ் ஸ்நோ என்ற பகுதி உள்ளது.இது தான் டயாப்ரம்- க்கு நரம்பு அளிக்கிறது. காது சவ்வு விரிவடையும் போது வேகஸ் ஸ்நோ ரிலாக்ஸாகி விக்கல் நிற்கும்.

மேலும் தெரிந்து கொள்ள:
விக்கல் வருவது நல்லதா கெட்டதா, விக்கல் வருவதற்கான காரணங்கள், விக்கல் மாத்திரை, விக்கல் நிற்க என்ன செய்யணும், விக்கல் ஏன் வருகிறது in english, விக்கல் ஆபத்தா