வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

0
177

வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பவரா? எச்சரிக்கை.. இந்த நோய் தாக்க கூடும்!!!

காலையில் எழுந்ததுமே டீ அல்லது காஃபி கப் முன்பு கண்விழித்தால் மட்டுமே நம்மில் பலருக்கும் அந்த நாள் இனிய நாளாக அமையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 முதல் 5 கப் வரை தேநீர் குடிப்பவர்களும் உண்டு.

வெறும் வயிற்றில் டீ அல்லது காஃபி குடிப்பதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ அல்லது காஃபி குடிப்பதால் வயிற்றில் செரிமான பிரச்சனைகளை உருவாக்கும். டீயில் டையூரிடிக் கூறுகள் உள்ளன. இது சிறுநீர் கழிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.

2. காலையில் எழுந்தவுடன் நீங்கள் தண்ணீர் இல்லாமல் எட்டு மணி நேரம் தூங்குவதால் உங்கள் உடல் ஏற்கனவே நீரிழந்து போகிறது. நீங்கள் தேநீர் குடிக்கும்போது, அது அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தி, தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.

3. பால் மற்றும் சர்க்கரை சேர்த்த டீயை தினமும் குடித்து வந்தால் இன்சோம்னியாவின் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்வதோடு தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும். தூக்க சுழற்சி வெகுவாக பாதிக்கும்.

4. கர்ப்பிணி பெண்கள் தேயிலை டீ முழுவதுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதன் காஃபின் உள்ளடக்கம் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கருச்சிதைவு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இவ்வளவு பிரச்சனைகளை உண்டாக்கும் டீ மட்டும் காஃபியை நாம் வெறும் வயிற்றில் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

author avatar
CineDesk