பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

Photo of author

By Divya

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

தமிழக அரசு ஏற்று நடத்தி வரும் ஆவின் நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை நிர்ணயித்து விற்று வருகிறது.

ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் தரமான பாலை விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இயங்கி வருகிறது.

மாதாந்திர பால் அட்டை மூலம் 5 லட்சம் பேருக்கு இந்த நிறுவனத்தின் மூலம் பச்சை, நீலம், ஆரஞ்சு, பிங்க் என்று 4 நிறங்களில் பால் பாக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகிறது. இதில் பச்சை மற்றும் நீல நிறம் கொண்ட பால் பாக்கெட்டை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி முதல் நிறுத்துவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதில் ஆவின் டிலைட் என்ற பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய போவதாக தெரிவித்தது. ஆவினின் இந்த செய்தி ஆவின் பால் உபயோகிக்கும் வடிக்கையாளராகளுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்தது என்றே சொல்லலாம். காரணம் பச்சை நிற பால் பாக்கெட்டில் 4.5% கொழுப்புச் சத்து இருக்கும் நிலையில் தற்பொழுது அறிமுகப்படுத்த உள்ள ஊதா நிற (ஆவின் டிலைட்) பால் பாக்கெட்டில் 3.5% கொழுப்பு சத்து மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்ததோ அதே விலையில் தான் ஊதா நிற பால் பாக்கெட்டிற்கும் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.

இவை 4.5% கொழுப்புச்சத்து கொண்ட பால் பாக்கெட்டிற்கும் அதே விலை, 3.5% கொழுப்புச்சத்து கொண்ட பால் பாக்கெட்டிற்கும் அதே விலையா? என்னங்க இது பகல் கொள்ளையா இருக்கு, இது மறைமுக விலை உயர்வை காட்டுகிறது என்று பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

கொழுப்புச் சத்து குறைவான டிலைட் பாலால் உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து குறைவாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறி வரும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் டிலைட் பால் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

அது என்னெவென்றால் மக்கள் விரும்பி பயன்படுத்தி வந்த பச்சை நிற பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தை அவர்கள் விரும்ப வில்லையாம். அதனால் தான் ஆரோக்கியம் நிறைந்த தமிழ்நாடு என்ற அடிப்படையில் ஆவின் டிலைட் பாலை அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

ஆனால் பச்சை நிற பால் பாக்கெட்டின் கொழுப்புச் சத்து அளவை 4.5% ஆக உயர்த்த தினமும் ரூ.840 கோடி ரூபாய் செலவாகிறது. இதனால் ஆவினுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் இதற்கு மாற்றாக தான் 3.5% கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆவின் நிறுவனம் இப்படி சொல்லும் பொழுது அமைச்சரின் டிலைட் பால் குறித்த விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதுமட்டும் இன்றி அதிகம் விற்பனையாகும் பச்சை நிற பால் பாக்கெட்டை மக்கள் விரும்பாமலா வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்று உண்மை அறிந்த சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.