பிரிட்டனில் வினோத சம்பவம்

Photo of author

By Parthipan K

பிரிட்டனில் வினோத சம்பவம்

Parthipan K

பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர்  ஹாம்ப்ஷியர்  பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் செய்த  கோழித்துண்டை சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை வெளியே துப்பும் போது அதில் நீலநிறத்தில்  ஏதோ ஒன்றை பார்த்தார்.

மீதமிருந்த கோழித்துண்டிலும் நீலநிறத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நிறுவனத்திடம் விசாரித்த போது இது எங்கள் உணவகங்களில் சமைக்கப்படவில்லை ஏதோ தவறுதலாக ஏற்பட்டிருக்கலாம் இனிமேல் இதுபோன்று நடக்காது என அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.