விளையாட்டு வினையாக மாறும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே அந்த பழமொழிக்கு ஏற்றபடி பிரான்ஸில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸில் ஒரு சிறிய ஊரில் ஓர் ஈயை அடிக்க முயன்ற ஒருவர், தம் வீட்டின் ஒரு பகுதியையே கொளுத்திவிட்டார். சுமார் 80 வயதுகொண்ட முதியவர் ஒருவர் உணவு உண்ணும் வேலையில் ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துள்ளது எரிச்சலடைந்த பெரியவர், பூச்சிகளைக் கொல்லும் மின்சார மட்டையால் அந்த ஈயை அடிக்க முயற்சி செய்தார். அந்த நேரம் பார்த்து அவர் வீட்டின் வாயுக் கலன் கசிந்துகொண்டிருந்தது. மின்சார மட்டை, கசியும் வாயு. இரண்டும் கலந்ததால் வெடிப்பு ஏற்பட்டு, வீட்டின் சமையலறை, கூரை ஆகியவை வெடித்துச் சிதறின. கையில் சிறிய தீக்காயத்துடன் பெரியவர் உயிர்தப்பினார் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.