கிணற்றில் விழுந்த  தெருநாய்! அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர்! 

Photo of author

By Rupa

 கிணற்றில் விழுந்த  தெருநாய்! அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர்! 

Rupa

Stray dog ​​fell into the well! The fire department in action!
  கிணற்றில் விழுந்த  தெருநாய்! அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய தீயணைப்புத் துறையினர்!
 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி சுப்புலாபுரம் கிராமத்தில் மையப்பகுதியில் உள்ள 70 அடி ஆழக்கிணற்றில் ஒரு தெருநாய் விழுந்து தத்தளித்து வருவதாக ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல்வந்தது. இதையடுத்து  உடனடியாக விரைந்துசென்ற ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் நாயைக் காப்பாற்ற கயிற்றால் வலையை  கிணற்றில் போட்டு  லாவகமாக வலையை மேலிருந்து இழுத்து நாயை பத்திரமாக மீட்டு வெளியேவிட்டனர்.  தரையைப் பார்த்ததும் மின்னல் வேகத்தில் தாவிக்குதித்து தப்பி ஓடியது. நாயை  காப்பாற்றிய செயல் ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.