தெருவே மணக்கும் “கருவாட்டு குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

0
113
#image_title

தெருவே மணக்கும் “கருவாட்டு குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

கருவாடு என்றால் அதன் மீது எழும் ஒரு வித வாசனை தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும்.இந்த வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காது.ஒரு சிலர் கருவாடு என்றால் விரும்பி உண்பார்கள்.இந்த கருவாடு நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்றாக இருக்கிறது.மீனை காட்டிலும் கருவாட்டில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கருவாட்டை வைத்து சுவையான குழம்பு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கருவாடு – 10 துண்டு

*நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – சிறிதளவு

*புளி – 1 எலுமிச்சம் பழ அளவு

*சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)

*தக்காளி – 1(நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 1

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 4

*கொத்தமல்லி விதை – 3 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பூண்டு – 5 பற்கள்

*உப்பு – தேவையான அளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

*தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்.அடுத்து ஒரு பவுல் எடுத்து அதில் புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 4 வர மிளகாய், 3 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,கருப்பு மிளகு 1 தேக்கரண்டி,சீரகம் 1 தேக்கரண்டி,5 பூண்டு பற்கள் சேர்த்து சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து அவற்றை ஆற விடவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி போட்டு சிறிதளவு தண்ணீர் நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு,வெந்தயம் போட்டு பொரிய விடவும்.பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேங்காய் பாலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.இறுதியாக கருவாடை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிண்டு கிண்டி அடுப்பை அணைக்கவும்.