பள்ளி மாணவர்கள் இப்படி செல்லும் பட்சத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு கடுமையான தண்டனை! அரசு வெளியிட்ட புதிய தகவல்!
திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல வகையான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதும். அதன் படி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், அவர்கள் உடன் வரும் உதவியாளர், பள்ளி, கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவர்கள் என அனைவருக்கும் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதன் காரணமாக அரசுப் பேருந்துகளில் தற்போது அதிக கூட்டம் நிரம்பி வழிகின்றது. தனியார் பேருந்துகளில் எல்லாம் காற்று வாங்கும் அளவிற்கு மாநகராட்சி பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் கூட்டநெரிசல் காணப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் நேரமான காலை நேரத்தில், அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைவரும் பயணம் மேற்கொள்வதன் காரணமாக அந்த நேரத்தில் எப்போதுமே கூட்டம் இருப்பது சகஜம் தான்.
ஆனால் தற்போது அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்பதையொட்டி அனைவருமே முண்டியடித்துக்கொண்டு அரசு பேருந்துகளில் தான் ஏறுகின்றனர். எனவே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. அதன் காரணமாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். இது அபாயகரமான பயணம் என்றாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் அப்படியே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அதன் காரணமாக பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. கடந்த வாரம்கூட இதுபோல் ஒரு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது அரசு போக்குவரத்து துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் என்ன நடந்தாலும் ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் எனபது போல் சொல்லி உள்ளது.