குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள நிலையில், 18 வயது நிறைவடையாத பெண்கள் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றமாகும்.
இது போன்ற செயல்களை தடுக்க ,குழந்தை திருமணம் புரியும் ஆண் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும், திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் இந்த சட்டத்தின்படி இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றாலோ அல்லது நடத்தி வைக்க முயன்றாலோ 04286 – 233103 என்ற இலவச தொலைபேசி அல்லது 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.