ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு!!

Sakthi

 

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு…

 

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சென்னையில் புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம் என்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(ஆகஸ்ட்16) வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிக்கு வரும்பொழுதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் பொழுதும் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

 

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் படிக்கும் இந்த பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உங்களின் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். பெற்ற தாய் தந்தைக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒழுக்கத்துடன் நீங்கள் கல்வி பயில வேண்டும்.

 

பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் இருசக்கர வாகனம் உங்களுக்கு கொடுத்த உங்களின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

 

அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீண்டும் நீங்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்தால் உங்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி நிர்வகத்திற்கு அனுப்பப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு எச்சரிகையும் விடப்பட்டது.