உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

Photo of author

By Amutha

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் திடீரென அந்த நான்கு மாணவர்களும் இந்த இரண்டு பெண்களை ஒரு வீட்டினுள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக தொட்டு துன்புறுத்தியுள்ளனர். இதனை அந்த சிறுமியின் சகோதரி தடுக்க முயன்று உள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் அந்த பெண்ணை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் உள்ளூர் பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரிய வரவே போலீசார் அவனை கைது செய்ய இயங்கிய உள்ளனர். இதனால் கொந்தளித்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடவே வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு சிறுவர்களையும் வலை வீசி தேடினர்.

இந்த சூழ்நிலையில் பாஜக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவன் தப்பி ஓடிவிட்டான். அவனை ரூ.10,000 சன்மானத்துடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம் பெண் கூட்டுப் பாலில் வன்புணர்வுக்கு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதுடன் பாஜக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.