ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!

0
182
Study at ITI with Scholarship! Here are the full details!
Study at ITI with Scholarship! Here are the full details!
ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 ஆகும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம்வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்படிப்புகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பிக்கும் போது(பெயர், தந்தைபெயர், தாயார்பெயர், பிறந்ததேதி, சாதி, அலைபேசிஎண், வீட்டு முகவரி ஆகிய விபரங்களை பிழையின்றி பூர்த்தி செய்து இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
மேலும் பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு மூலம் விலையில்லா பாடப் புத்தகம், மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, வரைபடக்கருவிகள், விலையில்லா மிதிவண்டி, சீருடை 2 செட் வழங்கப்படுகிறது.
மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க கடைசிதேதி 20.07.2022 ஆகும். விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடி (இருப்பு தப்புக்குண்டுசாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் இலவசமாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்யவேண்டும்.
அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களையும் 2022-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவுசெய்யவேண்டும். விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்த ATM card/Mobile banking ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
கூடுதல் விபரங்களுக்கு தேனி மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது தேனி ஐ.டி.ஐ.9499055765, ஆண்டிபட்டி ஐ.டி.ஐ :9499055770, போடி ஐ.டி.ஐ 9499055768 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை :-
மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் dstothenigmail.com என்ற மின்னஞ்சல் முகவரிலோ அல்லது 70106 65335 அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெளிவுபெறலாம்.
Previous articleமாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய  வழிகாட்டு நெறிமுறை!   
Next articleஅசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!