உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா எனும் மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தை சார்ந்த  பரூக் அஹ்மத் மிர் .இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது வயல் வெளியில் வேலை பார்த்து வந்த நிலையில்,இவரை அங்கிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.இவரது உடலில் தோட்டாக்கள் பாயிந்த நிலையில் இவரது தோட்டத்தில் கிடந்துள்ளார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.முன் விரோத காரணமாக யாரேனும்  சுட்டு கொன்றுவிட்டார்களாக?அல்லது பயங்கரவாதில் இவரை கொன்றுவிட்டார்களா? என விறுவிறுப்பாக விசாரணை செய்து வந்தனர்.அவ்வாறு விசாரணை செய்து வந்ததில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் பரூக் அஹ்மத் மிர் தீவீரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீவீரவாதிகளால் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து போலிசாருக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த இடமும் சற்று பரபரப்பாகவே உள்ளது.