ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

0
192
Success in the case of OPS! The main position for all of them?
Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த மாதம் பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது கட்சிக்குள்ளேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் பதவி அளித்ததும் மற்றும் தன் அனுமதி இன்றி பொதுக்குழுகூடம் கூட்டம் நடைபெற்றது ஒப்புக்கொள்ள முடியாது எனக் கூறி ஓபிஎஸ் அவர்கள் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை அடுத்து இம்மாதம் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலத்தை சேர்ந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள சில நிர்வாகிகளில் அவர் மேல் அதிருப்தி கொண்டவர்களாகவும் உள்ளனர். அவ்வாறு உள்ளவர்களை தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறினர்.

அவ்வாறு தங்கள் பக்கம் வருபவருக்கு நல்ல பதவி வழங்குவதாகவும் ஓபிஎஸ் கூறியதாக தெரிவித்தனர். அந்த வகையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. நீதிபதி முன்பிருந்தது போலவே கட்சி செயல்படும் என்றும் கூறி தீர்ப்பளித்துள்ளார். அந்த வகையில் பார்க்கும் பொழுது ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நல்ல பதவி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் தனது சொந்த ஊரில் ஆலோசனை கூட்டம் நடத்திய பொழுது சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி அவருடன் சேலம் ரவி உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஓபிஎஸ் வெற்றி பெற்ற நிலையில் இவர்களுக்கு நல்ல பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

Previous articleகணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..
Next articleபோதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..