முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

Photo of author

By Parthipan K

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சொத்துக்குவிப்பு தொடர்பான விவகாரத்தில் கே.பி.அன்பழகனின் மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கே.பி.அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்து அதன் அடிப்படையில் அவருடைய வீட்டில் இன்று அதிகாலை முதல் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை, தருமபுரி உள்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதேபோன்று முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பல பேர் கலக்கத்தில் உள்ளனர்.