விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

0
123

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன. மேலும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசால் பல சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான சேவை விமான சேவையே ஆகும். தற்போதைய சூழலில் விமானங்கள் சேவையிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறுகின்றன. இந்தச் சூழ்நிலையை நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. பாகங்களை வாங்கி அவற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன.

பயன்படுத்தப்பட்ட விமானப் பாகங்கள் சேவைத் தரத்தில் இருந்தால் அவற்றை நிறுவனங்கள் வாங்குகின்றன. நிறுவனங்களுக்கு விற்கப்படும் பாகங்கள் புதிதாகத் தயாரிக்கப்படும் விமானப் பாகங்களுடன் போட்டி போடும். செலவுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் புதிய பாகங்களை வாங்குவதைவிட பயன்படுத்தப்பட்ட பாகங்களை வாங்கும் சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. விமானப் பாகங்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்குச் சுமார் 3 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா
Next articleமக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!