ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது சென்னை மாவட்டத்தில் உள்ள சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் நடைமுறை படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்பொழுது சென்னை மாவட்டத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து ரயில் காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இனி நேரம் மாற்றப்பட்டு 7.45 க்கு புறப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் புறப்பட்ட சோழன் விரைவு ரயில் சரியாக தாம்பரத்தை 8.13 மணியளவில் சென்றடையும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் நேரமும் மாற்றப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில் காலை 10.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இனி நேரம் மாற்றப்பட்டு 11 மணிக்கு புறப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர் நிலையத்தை 6.15 மணிக்கு சென்றடையும் என்று அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இருந்து புறப்படும் குருவாயூர் எச்பிராஸ் இன் காலை 9 மணிக்கு பதில் 9.45 க்கு நேரம் மாற்றப்பட்டு புறப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.