திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!

Photo of author

By Rupa

திடீர் மாரடைப்பா.. ஆஸ்பிரின் 300 mg மாத்திரை! மருத்துவரின் அட்வைஸ்!

உணவு பழக்கவழக்கங்கள் மாறுபட்டதன் காரணமாக தற்பொழுது சிறு வயது முதலே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் மட்டும் 18 வயது முதல் 21 வயது உடைய இளைஞர்களுக்கு தான் அதிக அளவு மாரடைப்பு தாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி அவர்களின் உடல் தன்மைக்கு உடற்பயிற்சி செயல்பாடுகளும் சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து மருத்துவர் எட்மண்ட் பெர்னாண்டஸ் என்பவர் தந்துட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், இள வயதினர் முதல் அனைவர் கையிலும் ஆஸ்பிரின் 300 எம் ஜி என்ற மாத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு ஏதேனும் திடீர் மார்பு வலி ஏற்பட்டால் உடனடியாக அதை சாப்பிட்டுக் கொள்ளவும்.

குறிப்பாக பலரும் மார்பு வலியை வாய்வு என்று கடந்து விடுகின்றனர். நான் அந்த தவறை செய்யாதீர்கள் என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கூறிய மாத்திரைக்கு கீழ் பலரும் பல கேள்விகளை கேட்டு வந்தனர். அதில் இந்தியர்களுக்கு நீங்கள் சொன்ன மாத்திரை பொருந்துமா என்று கேட்டதற்கு, மாரடைப்பு என்பது உலகளவு மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறினார்.

ஆஸ்பிரின் 300 mg பயன்பாடு:

ஆஸ்பிரின் மாத்திரையானது நமது உடலில் ஏற்படும் வலி வீக்கம் மற்றும் ரத்தக் கட்டிகளை உண்டாக்கும் சில காரணிகளை நிறுத்த இது முக்கிய பங்கு வகிக்கும்.

ஆஸ்பிரியன் 300 எம் ஜி அனைவரும் உட்கொள்ளலாமா என்று கேட்டால் கிடையாது. குறிப்பாக இரைப்பை புண் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது கொடுப்பதில்லை.

அதேபோல இந்த மாத்திரைகள் முன்பு இருந்தே உட்கொண்டு வருபவர்கள் திடீரென்று மாத்திரை சாப்பிடாமல் நிறுத்தவும் கூடாது.