தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம்!

0
160
#image_title
தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம்.
நம்மில் பலருக்கு தீராத தலைவலி இருக்கும். பல வகையான தலைவலி மாத்திரைகள் போட்டும் கேட்காமல் தினமும் நாம் தலைவலியால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம். அந்த தலைவலியை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
தீராத தலைவலியை வெற்றிலையை வைத்து நாம் குணப்படுத்தலாம். சிலர் தலைவலி வந்தால் வெற்றிலையை சிறிதளவு பிரித்து நெற்றியின் இரண்டு ஒரங்களிலும் வைப்பார்கள். அப்பொழுது தலைவலி குணமடைந்து விடும். அது மாதிரியே இந்த பதிவில் வெற்றிலையை வைத்து பற்று தயாரித்து எவ்வாறு தலைவலியை நீக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
இதை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
* வெற்றிலை – ஒரு கொத்து
* கிராம்பு – சிறிதளவு
* ஏலக்காய் விதைகள் – சிறிதளவு
* பால் – சிறிதளவு
தயார் செய்யும் முறை;
முதலில் வெற்றிலையில் இருந்து காம்பை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் நடுவே உள்ள காம்பையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வெற்றிலைகளிலும் காம்புகளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பிரித்தெடுத்துள்ள வெற்றிலைக் காம்புகளை அம்மி அல்லது உரலில்  போட்டுக் கொள்ளவும். பிறகு இதில் கிராம்பு சேர்க்க வேண்டும். பிறகு ஏற்னவே இடித்து வைத்துள்ள ஏலக்காய் விதைகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பொருள்கள் அனைத்தையும் தட்டிக் கொள்ள வேண்டும். இதை அரைக்கும் பொழுது இதனுடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை பற்று பதத்திற்கு வரும் வரையில் அரைக்க வேண்டும். பதம் வந்த பிறகு இந்த கலவையை தலைவலிக்கு பற்று போல பயன்படுத்தலாம்.
நமக்கு தலைவலி வரும் சமயங்களில் இதை தயார் செய்து பற்று போடுவது கடினமான செயல். அதனால் இதை அப்படியே எடுத்து தட்டு போல வட்ட வடிவத்தில் எடுத்து நிழல் இருக்கும் பகுதியில் காய வைக்க வேண்டும். நேரடியான வெயிலில் வைக்க கூடாது. இது காய்ந்த பிறகு எடுத்து வைத்து தலைவலி வரும் சமயத்தில் பயன்படுத்தலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது?
தலைவலி வரும் சமயத்தில் இந்த வில்லையை எடுத்து பாலில் நினைத்து தலைவலி இருக்கும் இடத்தில் தேய்க்கலாம். அல்லது நீர் கோர்த்திருக்கும் பகுதிகளிலும் தேய்க்கலாம். அல்லது அரைத்த அந்த கலவையை தலைவலி இருக்கும் இடத்தில் சிறிதளவு பால் சேர்த்து பற்று போட வேண்டும். மூக்கிற்கு வலப்புறமும், இடப்புறமும் இந்த கலவையை தேய்க்க வேண்டும். இந்த பற்று காய்ந்து போவதற்கு முன்பே தலைவலி சரியாகி விடும். தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த கலவையை உச்சியில் வைக்க வேண்டும்.
இந்த வெற்றிலைப் பற்று தலையில் நீர் கோர்த்திருந்தால் வரும் தலைவலி, வெயிலில் சென்று வந்த பிறகு வரும் தலைவலி, அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது செல்போன் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் வரும் தலைவலி போன்ற தலைவலிகளை இந்த பற்று எளிமையாக குணப்படுத்தும்.