பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

0
102

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பு என்பது இவர்களுக்கு மட்டும் தான் வரும் இவர்களுக்கு வராது என்று கூற முடியாது அவை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பொதுவான ஒன்றாக தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாத வெடிப்பு ஏற்படுவதால் ஒரு சிலர் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் பாதங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான். மேலும் இந்த வெடிப்புகள் குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறுகின்றனர்.

சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் தான் பாத வெடிப்பு உருவாகின்றது. இந்த பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன் வலி மற்றும் ரத்த கசிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாத வெடிப்பு ஏற்பட காரணம்:

ஈரப்பதம் குறைவு, வயது கூடுதல், மரபியல் ,உடல் பருமன், சரியான முறையில் காலனி அணியாதது, வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் குறைபாடு, நீண்ட நேரம் நிற்பது போன்றவைகளால் தான் பாத வெடிப்பு ஏற்படுகிறது.

பாத வெடிப்பை தடுக்கும் முறைகள்:வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது இவை சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகின்றது வாழைப்பழத்தை நன்கு மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.

கற்றாழை:

கற்றாழையை பெண்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர் கற்றாழையை பாதங்களைத் தடவி காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும். காலையில் எழுந்தவுடன் பாதங்களை கழுவ வேண்டும் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இவ்வாறு செய்து வருவதன் மூலம் வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

author avatar
Parthipan K