மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்!
இந்த மூட்டுவலியானது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றன.
மூட்டு வலி என்பது மூட்டு ஜவ்வுகளில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகக் கூடிய வலி அல்லது மூட்டுகளுக்கிடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகளுக்கிடையே உராய்வு ஏற்படும் போது இந்த வலி உண்டாகிறது.பொதுவாக மூட்டு வலி வருவதற்கான காரணம் அதிக உடல் எடை. உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி கால்சியம் டிபிசியன்சி உள்ளவர்களுக்கும் வரக்கூடும்.அதிலும் பெண்களுக்கு இயல்பாகவே உடம்பில் கால்சியம் சத்து குறைவாக இருந்தால் இந்த மூட்டு வலியானது அதிகமாக ஏற்படுகிறது.
மேலும் உடம்பில் முரண்பான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தாலும் மூட்டு வலி உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் ஒரு சில பேருக்கு மரபு ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டாலும் இது வரக்கூடும்.
இந்த மூட்டு வலியை மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
வெந்தய சூரணம் :
நான் சமைக்கக்கூடிய அன்றாட உணவில் உபயோகப்படுத்தப்படக்கூடிய உணவுப் பொருட்களை வைத்து இதனை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வெந்தயம், சீரகம், மிளகு.
அதாவது வயது கடந்து ஏற்படக்கூடிய மூட்டு வலி மற்றும் கால்சியம் டிபிசியன்சி மூலம் உண்டாகக்கூடிய மூட்டு வலி இப்படி எப்பேர்பட்ட மூட்டு வலியையும் குணமாக்கக்கூடிய அதிக ஆற்றல் கொண்டது. இந்த வெந்தய சூரணம்.
இந்த மூன்று பொருட்களுமே எலும்பு உறுதிக்கு மிகவும் உதவுகிறது. அதனால் வெந்தயம் சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர மூட்டு வலி உடனே குணமாகும்.