தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா?? இதோ தீர்வு!!

0
35

தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா?? இதோ தீர்வு!!

பெண்களுக்கு வர கூடிய கீழ் முதுகு வலி, சியாட்டிகா பிரச்சனை, கால்சியம் குறைபாடு சரியாக இதை செய்யுங்கள்.

கீழ் முதுகு வலி என்றால் என்ன ?

கீழ் முதுகு, இடுப்பு பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, இது விலா எலும்புக்கு கீழே தொடங்கும் பின்புறத்தின் பகுதி. ஏறக்குறைய அனைவருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் குறைந்த முதுகுவலி உள்ளது.

கீழ் முதுகுவலியின் அறிகுறிகள்:

கீழ் முதுகுவலியின் அறிகுறிகள் மந்தமான வலி முதல் கூர்மையான படப்பிடிப்பு உணர்வு வரை இருக்கலாம். வலியால் நகரவோ அல்லது நேராக நிற்கவோ கடினமாக இருக்கும்.

திடீரென்று வரும் வலி “கடுமையானது.” இது விளையாட்டு அல்லது கனரக தூக்கும் போது இருக்கலாம். மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் வலி.

மிகவும் பொதுவான அறிகுறிகளில் சில அடங்கும்:

1: நீண்ட நேரம் ஓய்வெடுக்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும் போது வலி.

2: கனமான பொருட்களை தூக்கும் போது வலி.

3: குனிந்து பொருட்களை எடுக்கும்போது வலி.

4: இடுப்பு மற்றும் இடுப்பில் இருந்து வெளிப்படும் வலி.

5: செயலற்ற காலத்திற்குப் பிறகு அல்லது முதலில் எழுந்திருக்கும் போது விறைப்பு.

இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

புதினா இலை

இதில் அதிகப்படியான கால்சியம் சத்து இருக்கிறது. அஜீரண கோளாறுகளையும் சரி செய்யும். உடம்பில் வாயுக்கள் எங்கிருந்தாலும் அதனை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. நரம்புகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து தரும் நரம்பு பலவீனமாகவும் இருக்கும்.

மல்லி விதை

மஞ்சள் தூள்

இதில் உள்ள வேதிப்பொருள் நம் உடம்பில் உள்ள அடர்ச்சி தன்மைகளை நீக்கும். அதாவது ஆன்ட்டி இன்ஃப்ளமேட்ரி நம் உடம்பில் செயல்படும். ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.

சுக்கு பொடி

தேன் /கருப்பட்டி

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 11/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

2: பின்பு ஒரு கைப்பிடி அளவு கழுவி வைத்த புதினா இலை 1 டேபிள் ஸ்பூன் மல்லிவிதை 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

3: இதை 3-7 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நம் சேர்த்திருக்கும் அனைத்து பொருளும் அந்த தண்ணீரில் இறங்கி நன்றாக கொதிக்கவும். கொதித்த பின்பு அதனை ஒரு பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். பிறகு அதனை மிதமான சூட்டில் வடிகட்டி அதில் சிறிதளவு தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்க வேண்டும்.

இதனை எப்ப வேணாலும் குடிக்கலாம். முக்கியமாக நரம்பு பிரச்சனை கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் தேநீருக்கு பதிலாக இதனை குடித்து வந்தால் உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும். முதுகு வலி அதிகமாக இருந்தால் தினமும் குடித்து வரவேண்டும் பிறகு வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும்.

முக்கியமாக கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் சியாட்டிகா இருப்பவர்கள் இதனை குடித்து வந்தால் அது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. சியாட்டிகா இருப்பவர்கள் முக்கியமாக தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு நல்ல ஒரு பயனுள்ளதாக இருக்கும்.

author avatar
Parthipan K