பருவம் அடைந்த பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இது இயல்பான ஒரு விஷயம் என்றாலும் தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அவை கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
ஹார்மோன் பிரச்சனை,சுகர்,தைராய்டு பாதிப்பு,கால்சியம் பற்றாக்குறை,அதிக உடல் வெப்பத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசும்.இது ஒரு சங்கடமான சூழலை உருவாக்கிவிடும்.எனவே அதிக வெள்ளைப்படுதல் இருப்பவர்கள் அதை சீக்கிரம் சரி செய்வது கொள்வது நல்லது.
வெள்ளைப்படுதல் வருவதற்கான காரணங்கள்:
*மோசமான உணவுப் பழக்கம்
*சுய இன்பம்
*மாதவிடாய் மாத்திரை உண்ணுதல்
*சுத்தம் இல்லாத உள்ளாடைகள் அணிதல்
*உடல் உஷ்ணம்
*இரத்த சோகை
*மன உளைச்சல்
வெள்ளைப்படுதல் அறிகுறிகள்:
*பிறப்புறுப்பில் வெள்ளை திரவம் வெளியேறுதல்
*பால் போன்ற திரவம் வெளியேறுதல்
*துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுதல்
*யோனி பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல்
*முதுகு வலி மற்றும் இடுப்பு வலி
*எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல்
தேவையான பொருட்கள்:
*பொடுதலை இலை
*சீரகம்
*எருமைத் தயிர்
*வெண்ணெய்
செய்முறை விளக்கம்:
முதலில் சிறிதளவு பொடுதலை மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை இரண்டு தேக்கரண்டி எருமைத் தயிரில் போட்டு மிக்ஸ் செய்யவும்.அடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
*கற்றாழை மடல் – ஒன்று
*எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுக்கவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)நெல்லிக்காய் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பின்னர் இதை வடிகட்டி தேன் கலந்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.