சுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!

0
156

இருமல் தொல்லையிலிருந்து விடுபட தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் போதும். அதுவே இருமல் மட்டுமல்லாமல், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பினை சேர்த்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் கூச்சம் நீங்கிவிடும். அதனை தொடர்ந்து ஒரு டம்ளர் நீர் எடுத்து அதனுடன் சுக்கு பொடி சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் தொப்பையின் அளவு குறைந்து உடலானது சீரான தோற்றத்தைப் பெறும்.

மேலும் வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளை, நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று நீங்கும். சிறுநீரகத்தில் கல் இருக்கும் சிலருக்கும் அது கரைந்து விடும். அதன்பின் தொண்டை கட்டு குணமாக சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்து தொண்டையில் பூச அதுவும் குணமாகும். மேலும் சுக்கு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர நீர்க்கோவை முழுவதுமாக நீங்கும்.

பேன் மற்றும் ஈறு போன்றவை அழியும். சுக்குபொடி பொடி செய்து கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடல் அசதி, உடல் வலி, இருமல், சளி, உடல் பலம் பெறும். தயிருடன் சுக்குப் பொடியை சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். மேலும் சுக்குடன், சிறிது துளசி இலையை சேர்த்து மென்று சாப்பிட்டால் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியன நிற்கும்.

அலர்ஜி பிரச்சனைகளை நீக்குவதற்கு சுக்குடன், வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி தேன் கலந்து உண்டு வந்தால் சரியாகும். சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து உண்டு வந்தால் உடல் அசதி நீங்கி உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் அதிகமாக சுக்கு சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

இஞ்சி காய வைத்து அதன் பின் வருவது சுக்கு என்ற காரணத்தினால் இஞ்சிக்கு எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அதைவிட அதிகமாக இருக்கும். மேலும் அதனுடன் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து உண்டு வந்தால் அது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.

Previous articleசிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!!
Next articleகண்ணம்மாவா இது? ப்பா எவ்ளோ அழகு!! ரசிகர்களை உசுப்பேத்திய கண்ணம்மா!!