SULFUR BURPS: அடிக்கடி வரும் புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?

Photo of author

By Rupa

SULFUR BURPS: அடிக்கடி வரும் புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?

நம் வயிற்றுப்பகுதியில் அதிகப்படியான வாயுக் குமிழிகள் இருந்தால் புளித்த ஏப்பம் ஏற்படும்.உணவை வேகமாக சாப்பிடுதல்,புகை பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு வாயுக்களை உட்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.இதனால் உணவுப் பாதையில் வாயுக் குமிழ்கள் உருவாகி வாய் வழியாக ஏப்பமாகவும்,ஆசனவாய் வழியாக காற்றாகவும்குசு) வெளியேறுகிறது.

புளித்த ஏப்பம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

1)உடல் பருமன்
2)நெஞ்செரிச்சல்
3)வயிற்றுப் பொருமல்
4)குமட்டல்
5)வாயில் துர்நாற்றம் வீசுதல்
6)வேகமாக உண்ணுதல்
7)புகைபிடித்தல்
8)செரிமானக் கோளாறு

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உணவில் கட்டுப்பாடு இருந்தால் இந்த பாதிப்பை கட்டுப்படுத்தி விடலாம்.மூன்று வேளையும் வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிடுவதை தவிர்க்கவும்.காலை நேரத்தில் மட்டும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.மதியம்,இரவு அளவான உணவு உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் 8 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இவ்வாறு செய்வதால் செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்கும்.இதனால் புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த முடியும்.வேகமாக உண்ணும் பழக்கத்தை தவிர்த்து நன்கு மென்று சாப்பிடுங்கள்.

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

1.பூண்டு தேநீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பல் பூண்டை இடித்து போட்டு கொதிக்க விட்டு அருந்தினால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.

2.ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.

3.பச்சை தேயிலை தேநீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 அல்லது 3 பச்சை தேயிலை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் புளித்த ஏப்பம் வராமல் இருக்கும்.