சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்!

0
149
#image_title

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்!

திருமணமான பெண்கள் அனைவரும் தாங்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பௌர்ணமி அன்று செய்யக் கூடிய பரிகாரம் பற்றிய முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

சுமங்கலி பரிகாரம் செய்வது எப்படி?

சுமங்கலி பெண்கள் முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பூஜை அறையில் செய்ய வேண்டியவை…

முதலில் ஒரு விளக்கு எடுத்துக் கொள்ளவும். அகல் விளக்காக இருந்தால் இன்னும் சிறப்பு. அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பின்னர் 2 திரி போட்டு கொள்ளவும்.

பின்னர் அதில் சிட்டிகை அளவு ஜவ்வாது தூள், பச்சை கற்பூரம் 1 துண்டு போட்டு விளக்கேற்றவும்.
அடுத்து ஒரு சிறிய தட்டில் ஒரு வெற்றிலை வைத்து ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து “ஓம் சக்தி” என்று சொல்லி வெற்றிலை மீது போட்டு அர்ச்சனை செய்யவும். இவ்வாறு 108 முறை உச்சரித்து தூப தீப ஆராதனை செய்து வழிபடவும்.

பிறகு அந்த குங்குமத்தில் இருந்து சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு தீர்க்க சுமங்கலி வரத்தை தந்தருள மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு பௌர்ணமி அன்று செய்து வந்தால் உங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.