சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

Photo of author

By Parthipan K

சென்னை: அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அயனாவரம், பாளையம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ். இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்தில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சரவணனை சரமாரியாக கத்தியால் தாக்கினர். முதலில் நிலைதடுமாறிய சரவணன் பின்னர் சுதாரித்துக் கொண்டு அவர்களை எதிர்த்து தாக்க முயன்றார்.

அருகில் இருக்கும் கடைகளில் வேலை பார்த்த ஆட்கள் இதனை கவனித்து பிறகு அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கத்தியை காண்பித்து தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த 3 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.