சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

0
298
#image_title

சர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரை நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய நோயாக இருக்கிறது. நோய் ஏற்படுவதற்கு பரம்பரை காரணம் மற்றும் மாறி வரும் உணவு பழக்கங்கள் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், என எண்ணற்ற காரணங்களை கூறலாம்.

தரமான இன்சுலின் கிடைக்காமல் தரமற்ற இன்சுலின் உடலில் அதிக அளவு சுரப்பதாலும் ரத்தத்தில் இன்சுலின் அளவு சரியாக சுரக்காத காரணங்களாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்

உள்ளவர்கள் உடற்பயிற்சியுடன் சில உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க முடியும். நாம் உட்கொள்ளும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், போன்றவை சர்க்கரை நோயை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அவரைக்காய் இதில் புரதச்சத்து ,இரும்பு சத்து, விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் அவரைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டாள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், கால் மறுத்து போதல் போன்ற பிரச்சனைகள் குணமாகிறது.

பாகற்காய் இதில் அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காயுடன் நெல்லிக்காய் சேர்த்து ஜூஸாக குடித்து வந்தால் இன்சுலின் அளவை அதிகரித்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வாழைப்பூ துவர்ப்பு தன்னையும், கசப்புத் தன்மையும் கொண்ட இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. வாழைப்பூவை அதனுடைய துவர்ப்பு சுவையுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

முள்ளங்கி இதில் அதிக அளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கிறது. உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் சக்தி வாய்ந்த இயற்கையான வேதிப்பொருட்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக முள்ளங்கி பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் முள்ளங்கியை தினமும் மோரில் ஊறவைத்து கலந்து குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.

Previous articleபிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு! 
Next articleமாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு!