கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்….!

0
115
#image_title

கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்….!

சிலருக்கு உடல் எடை அதிகரிப்பதால், கழுத்து பகுதியை சுற்றி கருப்பான படிவம் ஏற்படும். அங்கு மட்டுமல்லாமல் அக்குள் மற்றும் முகத்திலும் கருமை நிறம் ஏற்படும். இதனால், கழுத்து பகுதியில் உள்ள கருமை அவருடைய அழகையையே கெடுக்கும்.

கவலை வேண்டும். பின்வரும் டிப்ஸை பயன்படுத்தி கழுத்து பகுதி சுற்றி இருக்கும் கருமையை எப்படி போக்குவது என்று பார்ப்போம் –

கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க, கஸ்தூரி மஞ்சள் பொடியுடன், ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து, அதை கழுத்தை சுற்றியுள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமைநிற சிறிது சிறிதாக குறையும்.

கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க, உருளைக்கிழங்கை தோல் சீவி, அதன் சாறு எடுத்து, அதில் அதிமதுரப் பொடி சேர்த்து கழுத்து மடிப்பு உள்ளிட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் படிப்படியாக குறையும்.

கழுத்து கருமையை போக்க வெள்ளரிச்சாறை எடுத்து கழுத்துப்பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை மாறும்.

கழுத்து கருமையை போக்க, கடலை மாவில், வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு கலந்து அதை கழுத்தை சுற்றி தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவி வந்தால் கருமை நிறம் மாறும்.

கோதுமையை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து எடுத்து, அதனுடன் தேன் கலந்து கழுத்தை சுற்றி போட்டு சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் படிப்படியாக குறையும்.

author avatar
Gayathri