“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!!

0
78
“Superstar” is just a title!! The director who completed the panchayat!!
“Superstar” is just a title!! The director who completed the panchayat!!

“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!!

கடந்த சில நாட்களாகவே ரஜினி காந்த் தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பற்றி பேசிய பிரச்சனை தான் அனைத்திலும் வந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சர்ச்சையை குறித்து இயக்குனர் பேரரசு இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆரை மக்கள் அனைவரும் “மக்கள் திலகம்” என்று அழைத்தார்கள்.

அவர் அரசியலுக்கு வந்த பிறகும் கூட அவரை அனைவரும் மக்கள் திலகம் என்று தான் அழைத்து வந்தார்கள். அவரைப்போலவே இன்று வரை நடிகர் சிவாஜி கணேசனை அனைவரும் நடிகர் திலகம் என்று அழைத்து வருகிறார்கள்.

எனவே, இதைப்போல தான் சூப்பர் ஸ்டார் என்பதும் ஒரு பட்டமாகும். இதற்கு போட்டி என்ற ஒன்றே கிடையாது. எப்போதுமே ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.

நடிகர் விஜய்க்கு தளபதி என்ற பட்டம் இருக்கிறது. பிறகு எதற்காக அனைவரும் அடித்துக் கொள்ள வேண்டும். ரசிகர்கள் நீங்கள் தான் இவ்வாறு அடித்துக் கொள்கிறீர்கள்.

இதை விஜய்யும், ரஜினியும் விரும்ப மாட்டார்கள். யார் அடுத்த உலக நாயகம் என்ற போட்டி எதுவும் எழவில்லை. பிறகு எதற்காக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக அடித்துக் கொள்கிறீர்கள்.

எப்போதுமே நமக்கு ரஜினி மட்டும் தாம் சூப்பர் ஸ்டார். இது ஒரு பட்டம் தான். எனவே யாரும் சண்டையிட்டுக் கொள்ளாமல் அமைதியாக இருக்குமாறு செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பேரரசு கூறி உள்ளார்.

author avatar
CineDesk