விவசாய வேளாண் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கு : சட்டரீதியாக கேரள அரசு ஆலோசனை !

Photo of author

By Parthipan K

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயத்திற்கான வேளாண் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கேரள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

கடந்த வாரம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகள் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் விவசாய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் ,இந்த விவசாய சட்ட மசோதா மீதான விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் விதிமுறைகளை மீறியதாக 8 எம்.எல்.ஏக்களை, கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்ய அமைச்சரவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

அந்த இடை நீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரை அவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர் .ஆனால், மன்னிப்பு கோரினால் 8 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

மேலும் ,மாநிலங்களவையில் 8 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் அவளைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் .இந்த சூழலில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பதாகைகளை ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயத்திற்கான மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து வேளாண் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் அவையில் விவசாயிகள் போராட்டம், விவசாய சங்கங்கள் மற்றும், பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரள மாநில முதல்வர் இதனை சட்டரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய சட்ட அமைச்சரவையில் கேட்டு முடிவு எடுக்கயுள்ளார்.

மேலும்,இது குறித்து திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன்,கேரள அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கேரள முதல்வர் கூறுகையில், விவசாய மசோதாவிற்கு சட்ட ரீதியாக போராடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதும் அவசியம் என்றும், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுசெய்து, சட்ட அமைச்சர் அவர்களுடன் கேட்டுக் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது சமூக வலைதள பக்கத்தில், மத்திய அரசு வேளாண் மசோதாக்களை கொண்டுவந்து, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கையும் துயரத்தில் அழுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டுமே 10, 281 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வேளாண் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்த 8 எம்.எல்.ஏக்கள் மீதான இடைநீக்கத்தை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.