உணர்ச்சி அற்றவர் சுரணையற்றவர் எடப்பாடி! என்று கடுமையாக சாடிய ஸ்டாலின்!

0
75

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்வேறு விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை விவசாய மசோதாக்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.வேளாண் மசோதாக்கள் எதிராக வருகின்ற 28ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த  திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி ஸ்டாலின் இந்த மசோதாக்கள் விவசாயிகள் முதுகெலும்பை உடைக்கும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் இதை மகிழ்ச்சியாக அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது வருத்தத்தை அழைப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் பதவி பழனிசாமி “விவசாயி ஆகிய நான் இந்த மசோதாவுக்கு மக்களின் நன்மையை உணர்ந்தே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயத்தை அறியாதவர்.அவரைப்போல நான் அல்ல” என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.

இந்த மசோதாவுக்கு அதிமுகவும் முதல்வர் பதவியை பழனிசாமிவும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது என கூறியுள்ளார்.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக சட்ட வல்லுநர்களும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.கேரள விவசாயத்துறை அமைச்சர் சுஷில்குமார் வேளாண் மசோதாக்களை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

 இதுபற்றி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், 

“மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு! இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலன் தவிர வேறு சுரணையற்ற அரசு; வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு” என கூறியுள்ளார்.

author avatar
Parthipan K