நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Photo of author

By Parthipan K

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Parthipan K

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிற்கான, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தொகையை வழங்குவதற்கு, மத்திய அரசிற்கு உத்தரவிடும் படி கோரிய மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாததால் –  சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை பரிசீலனை செய்த பாப்டே என்ற நீதிபதி தலைமையிலான அமர்வு, மேற்படி அனைத்து கட்ட விசாரணையும் நடத்தியுள்ளது.

இறுதியாக, இந்த வழக்கை விசாரணை செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்றும்  மனுதாரர், உயர்நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்டுக்கொள்ளலாம் என்று வலியுறுத்தியும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.