கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!!

0
111
#image_title

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!!

பல்லாண்டு காலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்து கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்தனர்.தமிழக அரசு இந்த நிலையை மாற்ற அனைத்து வகுப்பினரும் வேத படிப்புகளை படித்து அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தினை இயற்றியது.

இதனை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார் சங்கத்தலைவர் ஜி.பாலாஜி அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தமிழகத்தில் உள்ள ஆகம விதிப்படி அமைந்துள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அர்ச்சகர் நியமனம் மற்றும் இடமாற்றம் நடைபெறுவதாகவும் தெரிவந்துள்ளது எனவும் முறையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி போபண்ணா மற்றும் எம்.எஸ்.சுரேஷ் போன்றோர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. மனுதாரர் சார்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமார் அவர்கள் வாதாடினார்.இந்த உரையாடலில் அவர் கூறியதாவது ஆகம விதிப்படி அமைந்த கோவில்களில் அர்ச்சகரை நியமிக்க உச்ச நீதிமன்ற தடை உத்தரவு இருக்கும்போது தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கபடுவது சட்ட விரோதமானது என அவர் வாதிட்டார்.

இதனையடுத்து தமிழகத்தில் அமைந்துள்ள ஆகம விதிப்படி அமைந்த கோவில்களில் அர்ச்சகரை நியமிப்பதை நிறுத்தவேண்டும் எனவும் கூறிக்கொண்டார்.

இதன் விளைவாக 3 வாரங்களுக்குள் தமிழக அரசும் தமிழக அறநிலையத்துறையும் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!
Next articleஅந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!