அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

0
27
#image_title

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்த பேச்சு தான் நடைபெற்று வருகிறது.அந்தளவிற்கு தமிழக அரசியலில் இவை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரு.அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து திமுக கட்சி செய்த ஊழல் குறித்து ஆதாரத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார்.அதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும்,முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்தும் கருத்து கூறி அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தார்.ஜெ.ஜெயலலிதா அம்மையார் தண்டனை பெற்ற குற்றவாளி என்று கூறி அதிமுகவை அதிர வைத்தார்.அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் “ஏன் கூட்டணி என்று எங்களை பிடித்து தொங்குகிறீர்கள்? பிடிக்க வில்லை என்றால் விலகி கொள்ள வேண்டியது தானே” என்று அண்ணாமலையை கடுமையாக சாடினார்.அதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது என்ற பேச்சும் அதிமுக தொண்டர்களிடையே அதிகம் பேசப்பட்டது.ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் சர்ச்சை கருத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.அதுமட்டும் இல்லாமல் அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை இணக்கமாக இருந்ததால் அவர் மீது இபிஎஸ் கடும் கோபத்தில் இருந்து வந்தார்.இப்படி பல பிரச்சனைகளால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட தொடங்கியது.

இந்த சமயத்தில் தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக அதிமுக அறிவித்தது.இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று இரு கட்சி தலைமையும் அறிவித்தது.இந்த சமயத்தில் தான் அண்ணாமலை,”அறிஞர் அண்ணா” குறித்து பேசி கூட்டணியில் அணு குண்டு ஒன்றை போட்டார்.அதிமுக என்ற உருவாக காரணமாக இருந்த அறிஞர் அண்ணாவை பற்றி அண்ணாமலை அவதூறாக பேசிவிட்டார் என்று அதிமுக நிர்வாகிகள் கடுமையாக சாடினார்.அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டுமென்று மேலிட பாஜகவுக்கு அதிமுக தொடரந்து அழுத்தம் கொடுத்து வந்தது.ஆனால் இதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாத மேலிட பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது.

அதிமுகவின் இந்த நிலைப்பாடு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்ற அதிமுகவின் முடிவால் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட தொடங்கினர்.பல கட்சி தலைவர்களும் அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதில் பீதியில் உறைந்து இருக்கும் ஒரே கட்சி திமுக தான்.காரணம் அதிமுக – பாஜக கூட்டணியை வைத்து இவர்கள் போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகி விட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.அதே சமயம் அதிமுக தனித்து போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது திமுகவுக்கு சற்று சவாலான விஷயமாகத்தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் பாஜக இன்னும் வளரவில்லை என்பதால் அவர்களுக்கு அதிமுகவின் உதவி தேவைப்படுகிறது.அதிமுகவை வைத்து இந்த முறை 2 அல்லது 3 தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று மேலிட பாஜக கனவு கண்ட நிலையில் அதில் மண்ணை அள்ளி போடும் விதமாக அண்ணாமலை நடந்து கொண்டதால் தேசிய பாஜக அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அதிமுக கூட்டணியை முறித்து கொள்ளும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத மேலிட பாஜக உடனடியாக அண்ணாமலை அழைத்து பேச முடிவு செய்திருக்கிறது.எதனால் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது? என்பது குறித்த முறையான காரணங்களை கேட்டறிய அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்திருக்கிறது பாஜக தலைமை.

மேலும் அதிமுகவை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் பாஜக தலைமை உத்தரவால் இன்று இரவு அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு நாளை கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க இருக்கிறார்.