பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் சார்ந்த 31 மாணவர்கள் யுஜிசி மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .ஆனால் ,இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய முடியாது. நடத்த தடை விதிக்கக் கூடாது என்று யுஜிசி தரப்பில் தீர்ப்பு வழங்கியது .கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைப் பேரும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறியது.
இந்த நிலையில் மாணவர்கள் அமைப்பு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முன் வருகின்றனர். ஆனால் மாணவர்களின் நலன் அடிப்படையில் கொண்டு அதனை ரத்து செய்தோ அல்லது வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வந்தவுடன் தேர்வை நடத்துவது குறித்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் உள்ள சாராம்சங்களை நீதிபதிகள் முன்னிலையில் விளக்கி கூறினார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
மேலும் இதனை தொடர்ந்து முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் அவர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் அதில் யுஜிசியின் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளது. அதே போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பான மாணவர்கள் அமைப்பு தரப்பில் மனு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது.